Breaking News

குழந்தைகள் தினம் | Children's Day

    அனைத்து மாணவ மாணவிகளுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

     இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 

     ஜவஹர்லால் நேரு அவர்கள் குழந்தைகள் மீது அதிகமாக அன்பு வைத்திருந்தார். எனவே அதனை நினைவு கூறும் விதமாக அவர் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக இந்தியாவில் நாம் கொண்டாடுகிறோம்.

     இவர் 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் மோதிலால் நேரு, சொரூபராணி ஆவர்.

    குழந்தைகள் மீது நேருவுக்கு அளவு கடந்த அன்பு உண்டு. குழந்தைகளை எங்கு பார்த்தாலும் மிகவும் பிரியமுடன் அன்பு செலுத்துவார். அந்த நேரத்தில் தானும் ஒரு குழந்தையாக மாறிவிடுவார்.

    தன் சட்டை பையில் ஒரு ரோஜாவை எப்போதும் வைத்திருப்பார்.  

    அதனால்தான் குழந்தைகளும் இவரை நேரு மாமா என்று அழைத்தனர்.இவர் பிறந்த தினத்தை இன்றும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.



கருத்துகள் இல்லை

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு எனது நன்றி.