தீபாவளி மறுநாள் விடுமுறை | நவம்பர் 9 | ஈடுசெய்யும் விடுமுறை
தீபாவளி பண்டிகை நவம்பர் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்று வழக்கம் போல் அரசு பொதுவிடுமுறை. மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள் , ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாடிவிட்டு திரும்புவதற்கு ஏதுவாக 09.11.2026 திங்கட்கிழமை அன்று ஒருநாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உல்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுதுறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 28.11.2026 சனிக்கிழமை அன்று பணிநாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.



கருத்துகள் இல்லை
இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு எனது நன்றி.