பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு TET டிசம்பர் 20 அன்று – முழு விவரம்
TET தேர்ச்சி பெறாத பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 20, 2026 அன்று நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது.
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: அக்டோபர் 27, 2026
- விண்ணப்பிக்கக் கடைசி நாள்: நவம்பர் 19, 2026
- திருத்தம், சரிபார்ப்பு அவகாசம்: நவம்பர் 20 முதல் 22 வரை
- சிறப்பு TET தேர்வு: டிசம்பர் 20, 2026
விண்ணப்பிப்பவர்கள் கவனிக்க
- புதிதாக நிர்ணயிக்கப்பட்ட பணிச்சான்றிதழை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- தனிப்பட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வ ஆவணங்களுடன் பொருந்த வேண்டும்.
பின்னணி
உச்ச நீதிமன்றம் 2025 செப்டம்பர் 1 அன்று பணியிலுள்ள ஆசிரியர்கள் TET தகுதி பெற இரண்டு ஆண்டு அவகாசம் அளித்தது. இதன் அடிப்படையில், 2026-ஆம் ஆண்டில் ஜனவரி, ஜூலை, டிசம்பர் ஆகிய மாதங்களில் மூன்று சிறப்புத் தேர்வுகளை TRB நடத்தும் என்றும், ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.
ஆதாரம்: ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம்
கருத்துகள் இல்லை
இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு எனது நன்றி.